Featured Post

மீன்தொட்டி

இத்தாலி நாட்டில் மோன் என்ற ஊரில் 2004ல் ஒரு சட்டம், கிண்ணம் பொன்ற வளைந்த மீன் தொட்டிகள் பயன்படுத்தக்கூடாதென்று.ஏன்.. வளைந்த கண்ணாடி வழியா...

Friday, November 15, 2019

Mastodon - பிளவுபட்ட உலகத்தில் இன்னொரு அடி

பொதுவாக மக்களுக்கு விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுவதிலோ அல்லது வரிசையில் நிற்பதிலோ பெரிய பிரச்சனை இருப்பதில்லை, ஆனால் சில சமயங்க்களில் நமது பிரலங்கள் வெளிநாடுகளில் பாதுகாப்புச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டால் இந்த மக்கள் பொங்கி எழுந்துவிடுவார்கள். தங்களபிமான பிரபலத்தைச் சோதித்து அவமானப்படுத்திய நாட்டின் மீது போர் தொடுத்துவிடுவார்கள், நல்ல வேளையாக அந்தப் போர் நடப்பது சோஷியல் மீடியாவில் மட்டும் தான் என்பதால் பிரச்சனை எதுவும் இருப்பதில்லை.

இதுபோன்ற ஒரு பிரச்சனை சென்றவாரம் நடந்ததுவிட்டது, அதுவும் சோஷியல் மீடியாவிலேயே. ஒரு பிரபலத்தின் ட்விட்டர் அக்கவுண்ட் ஒரே வாரத்தில் இருமுறை முடக்கப்பட்டது. வேறெங்கும் பிரச்சனை என்றால் ட்விட்டரில் பொங்கலாம், ட்விட்டர் மீதே கோபம் என்றதால் புது சோஷியல் மீடியா தளமான மாஸ்டர்டான் நோக்கி  இந்திய ட்விட்டர் மக்கள் சாரை சாரையாக படை எடுத்தனர். இதை உருவாக்கிய ஜெர்மனையைச் சேர்ந்த Eugen Rochko இந்தக் கூட்டத்தை மிக ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

மக்களின் நோக்கம் சின்னப்புள்ளத் தனமாக இருந்தாலும் மாஸ்டர்டான் ஒரு சுவாரஸ்யமான கான்செப்ட் தான். கார்பரேட் ஆக்ரமிப்புகள், டேட்டா காலனியிசம், ப்ரிவசஸி போன்றவை நம்மைச் சுற்றியடிக்கும் இந்த நேரத்தில் மய்யம் தவிப்பது நல்லது தான் என்பதால் இந்த தளத்தை நாம் பரிசீலிக்கலாம்.



இதன் முக்கிய அம்சமாக இந்த மூன்று விஷயங்க்களைச் சொல்லலாம்

1. சமூகங்க்களின் கட்டுப்பாட்டில் சர்வர்கள்
2. சோஷியல் மீடியாக்க்களுக்கான இணைப்பு - பெட்வெர்ஸ்
3. ப்ரிவைஸி,

ட்விட்டர் போன்றவை ஒரு கார்பரேட் நிறுவனத்துக்குச் சொந்தமானது. எனவே அவர்களின் வழிமுறைக்கு ஒவ்வாத ட்வீட்கள் முடக்கப்படும், அதையே தொடர்ந்தால் அந்த பயனுருமே அதில் முடக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மட்டுருத்தல் செய்யும் உரிமை அந்த நிறுவனத்திடமே இருக்கிறது. அந்தப் பிரச்சனை இதில் இல்லை என்கிறார்கள். எப்படி என நாம் கேட்கிறோம்.

மட்டுறுத்தல் இருக்காதா என்றால், கண்டிப்பாக இருக்கும். அதே போல உங்கள் கருத்தகள் தடுக்கப்படலாம். பயனர் நீக்கப்படலாம். இதற்குத் தீர்வாக, அந்த சமயத்தில் உங்களுக்காக நீங்களே ஒரு சர்வர் தொடங்க்கிக்க்கொள்ளலாம், அல்லது அப்படி ஒரு சர்வரைக் கண்டுபிடித்து இணைந்து கொள்ளலாம் என்கிறார்கள். என்ன விளையாடுகிறார்களா?

அந்தக் காலத்தில் சில ஜாதிகளை கோவிலுக்குள் அனுமதிக்காவிட்டால் அவர்களே கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று சொன்னார்களே அது போல. அதுவே சரியான தீர்வல்ல. ஆனால் இது அதை விட அபத்தம் ஏனென்றால், சிந்திக்கத்தெரிந்த எந்த ஒரு மனிதரும் எப்போதும் ஒரே தரப்பில் இருப்பதில்லை. அரசியல், சினிமா, வாசிப்பு, மொழி, நாடு என்ற ஒன்றையொன்று ஊடறுத்து செல்லும் பல சிந்தனை கொண்டவர் எந்தனை சர்வர்களில் எந்தனை ஐடி உருவாக்குவது. 

இப்படி தனிப்பட்ட சர்வர்களில் இணைவதன் மூலம் அவர் மீள முடியாத பிரிவுக்குள் தள்ளப்படுகிறார்.

மேலும் சமரசத்தை உருவாக்குவதற்குப் பதிலாக தனித் தனித் தீவுகளாகப் பிரிப்பதையே இந்த ஐடியா முன்னெடுக்கிறது. எற்கனவே பிளந்துபட்டுக்  கிடக்கும் இந்த உலகத்துக்கு இது செய்வது நன்மையா என்ன?

2. சோஷியல் மீடியா இணைப்பு.

ட்விட்டர், பேஸ்புக், யுடியூப் எல்லாம் ஒரே அக்கவுண்டில் இருந்தால் எப்படி இருக்கும் என கேட்கிறார்கள். மோசமாக இருக்கும் என்கிறோம்.

ஒரு வீட்டில் பைக்கும் காரும் மேலும் ஒரு சைக்கிளும் இருக்கின்றன என்றால் அது வெவ்வேறு காரணங்க்களுக்காக என்பது புரியும் தானே. அதுபோல யுடூபில் நாம் பார்க்கும் எல்லாம் பேஸ்புக்கில் வரத்தேவை இல்லை. எல்லாம் ஒன்று என்ற ஐடியா டெக்னிகலாக நன்றாக இருந்தாலும் நமக்கு பெரிய பலனில்லை.

3. ப்ரைவஸி.

நமது தகவல்களை கூகிள், பேஸ்புக் போன்றவை மிக அதிகமாக வைத்திருக்கிறன என்பது உண்மை தான்.  அதனால் பல சர்ச்சைகள் வந்தன என்பது சரி தான்.ஆனால் மாஸ்டர்டானில் ஒவ்வொரு சர்வரின் உரிமையாளரும் எல்லா பயனிரின் தனிப்பட்ட செய்திகள் உட்பட அனைத்தயும் பார்க்க  முடியும்.

நமது தனிப்பட்ட தகவல்களை ட்விட்டர் போன்ற கார்பரெட்ட்டுகள் கையாள்வதை விட நம்ம ஊர் சர்வர் ஓனர்கள் பார்த்தால் உங்க்களுக்கு பரவாயில்லை என்றால் இதை ப்ரைவஸி என்று ஒப்புக்கொள்ள்லாம். 

ஆனால் கார்பரேட்களில் சில வழிமுறைகள் கையாளப்படும் என்பதும், நம்ம தனிப்பட்ட வண்டவாளங்க்கள் நம்ம ஊர்க்காரங்க்களுக்குத் தெரிவதை விட ஏதோ வெளி நாட்டுக்கரனுக்குத் தெரிவது பிரச்சனை குறைவு என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கின்றது.


அப்படியென்றால் இதில் நன்மை எதும் இல்லையா, இதை பயன்படுத்தக் கூடாதா என்றால், நான் ஏற்கனவே ஒரு கணக்கு உருவாக்கிவிட்டேன். ஆனால்  அவர்கள் சொல்லும் காரணங்க்கள் எதற்கும் அல்ல.

எந்த ஸிஸ்டம் என்றாலும் காலம் செல்லச் செல்ல காம்ப்ளெஸிட்டியும் சைஸும் அதிகமாகி புதியவர்களுக்கு சின்னச் சோர்வை உருவாக்கும். எத்தனை விமர்சனங்க்கள் இருந்தாலும் புதிய ஸிஸ்டத்தில் இருக்கும் ஆரம்ப உற்சாகத்துக்காக ஒரு ட்ரையல் ரன் நல்லது.

Monday, August 12, 2019

மீன்தொட்டி

இத்தாலி நாட்டில் மோன் என்ற ஊரில் 2004ல் ஒரு சட்டம், கிண்ணம் பொன்ற வளைந்த மீன் தொட்டிகள் பயன்படுத்தக்கூடாதென்று.ஏன்..

வளைந்த கண்ணாடி வழியாகப் பார்க்கும் மீனுக்கு எல்லாமே வளைந்துதான் தெரியும். வளைந்த கதவுகள், வளைந்த அறை மற்றும் வளைந்த மனிதர்கள்.. இது உண்மைக்கு புறம்பானது எனவே கொடுமை என்று காரணம் சொல்லப்பட்டது..

உண்மையில் இது கொடுமையா?

மீன் தொட்டிகளை கவனித்தால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் ஒவ்வொரு கண்ணாடியில் செய்யப்பட்டுள்ளன.. தடித்த கண்ணாடி, மெல்லிய கண்ணாடி அல்லது கலர்க்கண்ணாடி..

இதில் ஒரு தொட்டியில் இருக்கும் மீன் பார்ப்பது போல் இன்னொரு தொட்டி மீன் பார்க்க முடிவதில்லை...இதில் எந்தத் தொட்டி மீன் பார்ப்பது உண்மை?

வளைந்த தொட்டி மீன் எத்தனை மணிக்கு அதன் வளைந்த மனிதர் வந்து உணவு போடுவார் என ஒரு கணக்கு வைக்கிறது என்றால் அது பொய்யில்லை, அதுவும் உண்மைதான்.. பக்கத்தில் இருக்கும் இன்னொரு தொட்டி மீனுக்கு அதே மனிதர் மிக உயரமாக் தெரிந்தால் அந்தத் தொட்டிக்கு அதுவும் உண்மை தான். அவற்றுக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் ஒரு தொட்டி மீன் இன்னொரு தொட்டி மீனோடு விவாதம் செய்தால் என்ன ஆகும். நல்லவெளையாக மீன்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லை.. ஆனால் நமக்கு இருக்கிறது..

ஆனால் நமக்கு? நல்ல நண்பராக இருந்தும் உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் ஏதாவது சார்பு எடுத்து நான் எளிதாகக் காணும் உண்மயை பார்க்க மறுத்து விவாதித்து வெறுப்பேற்றும் நண்பர் ஒருவர் இருக்கிறார் இல்லையா.. அவர் மீது தவறில்லை, அவர் இருப்பது இன்னொரு மீன் தொட்டி..

மனிதர்களான நாமும் ஒவ்வொரு நம்பிக்கை, கொள்கை, கட்சி என ஒவ்வொரு மீன் தொட்டியில் இருக்கிறோம். ஒரு உண்மையை நம்பி மற்ற மீன் தொட்டி ஆட்களோடு பேசும் போது அந்த விவாதம் வருகிறது மாற்றுக்கருத்தோடு வெறுப்பும் வருகிறது. இதற்கு தீர்வு மற்ற தொட்டிகளுக்கு விசிட் அடிப்பதுதான்..

இந்த மீன் தொட்டி சேனலில் நாம் மீன்களைப் போல ஒரே தொட்டியில் இருக்கப்போவதில்லை.. நமது பயணத்தில் பல தொட்டிகளுக்கு பல கருத்துக்களுக்குப் பயணிப்போம்... விவாதிப்போம்  வெறுப்பில்லாமல்.