Featured Post

மீன்தொட்டி

இத்தாலி நாட்டில் மோன் என்ற ஊரில் 2004ல் ஒரு சட்டம், கிண்ணம் பொன்ற வளைந்த மீன் தொட்டிகள் பயன்படுத்தக்கூடாதென்று.ஏன்.. வளைந்த கண்ணாடி வழியா...

Monday, August 12, 2019

மீன்தொட்டி

இத்தாலி நாட்டில் மோன் என்ற ஊரில் 2004ல் ஒரு சட்டம், கிண்ணம் பொன்ற வளைந்த மீன் தொட்டிகள் பயன்படுத்தக்கூடாதென்று.ஏன்..

வளைந்த கண்ணாடி வழியாகப் பார்க்கும் மீனுக்கு எல்லாமே வளைந்துதான் தெரியும். வளைந்த கதவுகள், வளைந்த அறை மற்றும் வளைந்த மனிதர்கள்.. இது உண்மைக்கு புறம்பானது எனவே கொடுமை என்று காரணம் சொல்லப்பட்டது..

உண்மையில் இது கொடுமையா?

மீன் தொட்டிகளை கவனித்தால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் ஒவ்வொரு கண்ணாடியில் செய்யப்பட்டுள்ளன.. தடித்த கண்ணாடி, மெல்லிய கண்ணாடி அல்லது கலர்க்கண்ணாடி..

இதில் ஒரு தொட்டியில் இருக்கும் மீன் பார்ப்பது போல் இன்னொரு தொட்டி மீன் பார்க்க முடிவதில்லை...இதில் எந்தத் தொட்டி மீன் பார்ப்பது உண்மை?

வளைந்த தொட்டி மீன் எத்தனை மணிக்கு அதன் வளைந்த மனிதர் வந்து உணவு போடுவார் என ஒரு கணக்கு வைக்கிறது என்றால் அது பொய்யில்லை, அதுவும் உண்மைதான்.. பக்கத்தில் இருக்கும் இன்னொரு தொட்டி மீனுக்கு அதே மனிதர் மிக உயரமாக் தெரிந்தால் அந்தத் தொட்டிக்கு அதுவும் உண்மை தான். அவற்றுக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் ஒரு தொட்டி மீன் இன்னொரு தொட்டி மீனோடு விவாதம் செய்தால் என்ன ஆகும். நல்லவெளையாக மீன்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லை.. ஆனால் நமக்கு இருக்கிறது..

ஆனால் நமக்கு? நல்ல நண்பராக இருந்தும் உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் ஏதாவது சார்பு எடுத்து நான் எளிதாகக் காணும் உண்மயை பார்க்க மறுத்து விவாதித்து வெறுப்பேற்றும் நண்பர் ஒருவர் இருக்கிறார் இல்லையா.. அவர் மீது தவறில்லை, அவர் இருப்பது இன்னொரு மீன் தொட்டி..

மனிதர்களான நாமும் ஒவ்வொரு நம்பிக்கை, கொள்கை, கட்சி என ஒவ்வொரு மீன் தொட்டியில் இருக்கிறோம். ஒரு உண்மையை நம்பி மற்ற மீன் தொட்டி ஆட்களோடு பேசும் போது அந்த விவாதம் வருகிறது மாற்றுக்கருத்தோடு வெறுப்பும் வருகிறது. இதற்கு தீர்வு மற்ற தொட்டிகளுக்கு விசிட் அடிப்பதுதான்..

இந்த மீன் தொட்டி சேனலில் நாம் மீன்களைப் போல ஒரே தொட்டியில் இருக்கப்போவதில்லை.. நமது பயணத்தில் பல தொட்டிகளுக்கு பல கருத்துக்களுக்குப் பயணிப்போம்... விவாதிப்போம்  வெறுப்பில்லாமல்.